Im Folgenden seht ihr einen wahren Coming-Out-Brief einer Tamilin. Sie hat den Schritt gewagt sich zu outen. Diesen Brief könnt ihr ebenfalls verwenden oder überarbeiten, falls ihr ein Coming-Out gegenüber euren Eltern oder einer anderen Person plant. Die Verfasserin freut sich sehr, wenn euch der Brief weiterhilft!
Liebe Eltern,
ihr kennt mich schon über 20 Jahre. Das ist eine enorm lange Zeit, in der ihr immer hinter mir standet und für mich da wart. Nur leider kennt ihr einen kleinen Teil von mir noch nicht. Dieser kleine Teil von mir, hat mich die letzten Monate, vor allem im Jahr 2018, verfolgt.
„Ich wollte diesen Teil nicht akzeptieren und hatte einen Konflikt mit mir selbst gehabt. Ich habe mich selbst gehasst und konnte mir keine schöne Zukunft vorstellen.“
Ihr habt mir beigebracht, dass das Leben nur einen Sinn macht, wenn man etwas für die Gesellschaft und andere Menschen bewirkt. Als ich mir Gedanken über mich gemacht habe, hat es plötzlich “Klick” gemacht. Ich hatte einen sehr aufwühlenden, aber dafür bereichernden Lebenssinn entdeckt. Den kleinen Teil, den ich zunächst schwer akzeptieren konnte, werde ich von nun an als sehr starken Teil von mir sehen.
Ein Teil, der sogar die tamilische Gesellschaft ein Stück weit verändern könnte. Meine Vision ist es, durch Beratungsangebote anderen Menschen zu helfen, die das gleiche erleiden müssen wie ich. Auch, wenn ich sehr gute Freunde an meiner Seite habe, es fehlt an professionellen Beratungsstellen für Tamilen, die gezielter helfen können. Ich bin selbst aus einem sehr tiefen schwarzen Loch herausgekommen und habe nun eine eigene Perspektive. Ist dies nicht etwas Besonderes? Ihr könnt mich sogar dabei unterstützen! Wir können gemeinsam Projekte starten und ein Stück die Gesellschaft verbessern.
Das was ich euch gleich erzählen werde braucht Zeit. Ich werde respektieren, dass ihr Zeit brauchen werdet – Zeit, die ich selber brauchte. Nach unserem Gespräch erhoffe ich mir, dass ihr mich weiterhin so liebt wie zuvor. Denn ich bin immer noch so wie ihr mich vor diesem Brief kanntet! Die Wahrheit ist: Ich kann keine Gefühle für Männer entwickeln, sondern nur für Frauen. Ihr dürft mir gleich Fragen stellen, die ich ehrlich beantworten werde. Ich erhoffe mir, dass ihr mir mit Geduld zuhört, auch wenn es sehr schwierig wird.
So jetzt komme ich zum Punkt: Ich bin homosexuell. Ja, das bin ich. Es liegt nicht an euch oder sonst wen. Mein Coming-Out hat nichts mit euch zu tun. Ich bin schon immer lesbisch gewesen. In einer Bildungsgesellschaft, wie in Deutschland ist vor allem den gebildeten Menschen bekannt, dass Homosexualität keine Krankheit oder eine Art Lifestyle ist, sondern genauso “normal” ist, wie Heterosexualität.
Ich möchte meine Bildung dazu nutzen, um die tamilische Gesellschaft aufzuklären und zu unterstützen. Ja das mache ich! Dabei könnt ihr mir gerne behilflich sein! Ich hoffe, dass ihr mich als Person und meine Vision versteht. Sonst halte ich es nicht mehr bei uns zu Hause aus. Jeden Tag von der Uni kommen zu müssen, um in eure traurigen Augen zu blicken, würde ich leider nicht mehr aushalten. Ihr würdet dann leider einen Teil von mir nicht akzeptieren.
„Bitte fühlt euch nicht schuldig.“
Papa, Mama – ich liebe euch sehr.
Bild („Rainbow flag“) unter Creative Commons Lizenz von Stock Catalog
Du findest diesen Artikel interessant, möchtest die LGBTQ-Community unterstützen oder suchst Anschluss? Dann kannst du Colourful-Earth – auch anonym – auf ihrer Website, via Instagram, Facebook oder E-Mail (colourfulearth.contact@gmail.com) kontaktieren. Außerdem findest du sie auf Youtube.
Dieser Artikel ist als bereichernder Gastbeitrag für diesen Blog entstanden. Du hast auch eine oder mehrere Geschichten, die du mit den Lesern teilen und zum Nachdenken anregen möchtest? Dann klicke hier: Gastautor werden und erfahre in welchen einfachen Schritten du einen Beitrag zu diesem Blog leisten darfst.
கீழே நீங்கள் பார்ப்பது ஒரு தமிழ்மகிழினியின் “தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் அஞ்சல்”. இவ்வஞ்சல் மூலமாக அவளின் துணிச்சல் அவளைப் பற்றி வெளிப்படுத்த முனைந்தது. நீங்களும் உங்களைப் பற்றி உங்களது பெற்றோருக்கு வெளிப்படுத்த இவ்வஞ்சலைப் பயன்படுத்தலாம்.
அன்புள்ள அப்பாவுக்கும் அம்மாவுக்கும்,
என்னைப் பற்றி உங்களுக்கு 20 வருடங்களுக்கு மேலாகத் தெரியும். ஆனால், உங்களுக்கு என் மனதில் உள்ள ஒரு சிறிய பகுதி பற்றித் தெரியாது. கடந்த சில மாதங்களில் குறிப்பாக 2018 இலிருந்து என் மனதில் நிறைய சிந்தனைகள் வந்து போகின்றன. அது பற்றிக் கதைக்க இப்போது தான் நேரம் வந்துள்ளது என நான் நினைக்கிறேன்.
எனது மனதில் ஏற்றபட்ட சிந்தனையால் நானே மறைந்து போகலாம் என நினைக்கிறேன். ஏன்னென்றால், என்னால் மற்றவர்கள் வேதனைப்படுவதை நான் விரும்பவில்லை. நீங்கள் என்னிடம் “நம் வாழ்வில் எம் சமுதாயத்துக்கும் மக்களுக்கும் தொண்டு செய்து வாழ வேண்டும்” என்று சொல்லியிருந்தீர்கள்.
நான் என்னைப் பற்றி சிந்தித்த போதுதான் என்னைப் பற்றி நானே புரிந்து கொண்டேன். என்னுடைய பிறப்பின் அர்த்தத்தைக் கண்டுபிடித்தேன். என்னை நான் அறிமுகப்படுத்தி, மறைந்தும் இதை மறைத்தும் வாழும் தமிழர்களை வெளிக்கொண்டு வர விரும்புகிறேன். எங்கள் தமிழருக்கும் எம்மைப் பற்றி அறியப்படுத்த வேண்டும்.
நான் சொல்லப் போவதைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாவீர்கள். தயவுசெய்து இதைத் தவறென நினைக்க வேண்டாம். சமுதாயம் இதைத் தவறென்ற போர்வையால் போர்த்தி வைத்துள்ளது. ஆனால், இது தவறில்லை. இதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு நேரம் தேவை என்பது எனக்குத் தெரியும். ஏன்னென்றால், நான் என்னைப் பற்றி உணர்வதற்கும் எனக்கும் நேரம் தேவைப்பட்டது.
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா, அப்பா. நீங்களும் அதற்குப் பிறகும் என்மீது இப்போதுபோல் எப்போதும் அன்பு காட்டுவீர்கள் என நம்புகிறேன்.
„ஏனென்றால், நான் இப்போதும் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருக்கிறேன். நான் மகிழ்ச்சியாக வாழ்வதைத் தானே விரும்புகின்றீர்கள்?“
நான் ஆசைப்படுவது போல் நான் வாழ முடிந்தால் தான், நான் மகிழ்ச்சியாக வாழ்வேன். என் மனமறிந்து எந்தப் பிழையும் செய்யவில்லை. நான் செய்வதும் பிழையில்லை. அப்பா, அம்மா, நான் ஒரு மகிழினி. என்னக்கு ஆண்கள் மீது ஈர்ப்பில்லை. பெண்கள் மீதுதான் ஈர்ப்புண்டு. நான் இப்படித்தான். ஏனென்றால், நான் பிறப்பில் இருந்தே இவ்வாறுதான் என்பதை இயற்கையே முடிவுசெய்துவிட்டது.
„தயவுசெய்து இதற்காகக் குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டாம்.“
நான் இப்படிப் பிறந்ததற்கு நீங்கள் காரணமில்லை. நீங்கள் கடினமான தருணங்களை உங்கள் வாழ்க்கையில் சந்தித்துள்ளீர்கள். ஒரு வாழ்க்கையை மகிழ்வாக வாழ்வது எவ்வளவு கடினம் என்று உங்களுக்கு நான் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. தயவுசெய்து என்னை இப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.
நான் என் மனதை மாற்றி, எமது கலாச்சாரப் போர்வைக்குள் முடங்கி வாழ்வதால் என்ன பயன்? வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றி வாழ்வது கூடாது தானே? அம்மா, அப்பா, உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் …
இப்படிக்கு
உங்கள் மகள்
Pciture („Rainbow flag“) unter Creative Commons License by Stock Catalog
You think this article is interesting, would like to support the LGBTQ-Community or looking for connection? Then you can contact Colorful-Earth (anonymous) on their Website, via Instagram, Facebook or E-mail (colourfulearth.contact@gmail.com). You can also find them on Youtube.
This article was created as an enriching guest post for this blog. Do you also have one or more stories that you want to share with the readers and make them think? Then click here: Become a guest author and learn in which simple steps you can make a contribution to this blog.